அஸ்தானா: வெப்பத்திற்குப் பிறகு பெருமளவில் பனி உருகியதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஜகஸ்தானில் உள்ளூர்வாசிகளால் கட்டப்பட்ட தற்காலிக அணைகளை அதிகாரிகள் வெடிமருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனர். யூரல் ஆற்றின் நீர் மட்டம் வியத்தகு முறையில் அதிகரித்ததை அடுத்து, சுமார் 100,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மேற்கு கஜகஸ்தானில் 3000க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விவசாயத் தேவைக்காக உள்ளூர் மக்களால் கட்டப்பட்ட தற்காலிக அணைகளை உள்ளாட்சி நிர்வாகம் தற்போது இடித்துத் தள்ளுகிறது.